தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. தற்போது நீதிமன்றக் காவலில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்றுடன் அவரது நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், அவரது காவலை மே 20ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தர்விட்டுள்ளது. அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், அவரது காவலை நீட்டித்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கை மற்றும் ஜாமீன் மனு என கேஜரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடந்து வருகிறது. அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு அமலாக்கத்துறை தரப்பில், அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தற்போது ஜாமீன் வழங்கினால், அரவிந்த் கேஜரிவால் எந்தெந்த பணிகளை செய்யலாம், எந்தெந்த பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வாதம் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0