கோவை ரயில் நிலையம் அருகே இறந்து கிடந்தவர் அடையாளம் தெரிந்தது

கோவை ரயில் நிலையம் ,லங்கா கார்னர் ,ரயில்வே பாலத்துக்கு அடியில் நேற்று ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து அனுப்பர்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இறந்து கிடந்தவர் சட்டை பையில் ஆதார் கார்டு இருந்தது.விசாரணையில் அவர் சூலூர் பி.டி.ஓ. காலனி சேர்ந்த ஏசுராஜா ( வயது 32) என்பதுதெரியவந்தது இவர் எப்படி செத்தார் ? என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..