துயர சம்பவம் மேட்டுப்பாளையம் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து; 30 பேர் படுகாயம்; சிறுவன் பலி

மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32பேர் படுகாயம் அடைந்துள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலை சாலையோர பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான விபத்தில் 32 பேர் படுகாயம் என தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த சுற்றுலா வாகனமானது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 32 பேர் படுகாயமடைந்தததாக தகவல் கிடைத்துள்ளது. காயமடைந்தவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைச்சாலையில் குஞ்ச பண்ணை அருகே உதகைக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய சுற்றுலா வாகனம் கவிழ்ந்த விபத்தில் முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதி: சென்னை வியாசர்பாடி பெரம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு குழுவாக 16 பெரியவர்கள் 15 குழந்தைகள் மற்றும் என 31 பேர் கடந்த 30 ஆம் தேதி நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்பட்டு 1 ம் தேதி மேட்டுப்பாளையம் வந்தடைந்துள்ளனர். பின்னர் ஏற்கனவே ஆன்லைன் மூலம் பதிவு செய்த சுற்றுலா வாகனத்தில் (மினி பேருந்து) உதகைக்கு சென்றுள்ளனர். ஊட்டியை சுற்றிப் பார்த்து விட்டு மாலை 5 மணியளவில் ஊட்டியில் இருந்து தாங்கள் வந்த சுற்றுலா வாகனத்தில் மேட்டுப்பாளையம் திரும்பியுள்ளனர். சுமார் 7 மணியளவில் வாகனம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் பவானிசாகர் அணை காட்சி முனை அருகே வந்த போது சுற்றுலா வாகனம் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு இதில் வாகனத்தில் இருந்த ஓட்டுநர் உள்பட 32 பேரும் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சமூக ஆர்வலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்கள் ஒவ்வொருவராக மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். படுகாயமடைந்த 6 பேருக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீதமுள்ள குழந்தைகள் பெண்கள் உட்பட இருபத்தைந்திற்கும் மேற்பட்டோருக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலத்த காயம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 7 வயது சிறுவன் ஒருவர் விபத்தில் உயிரிழந்தான் விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்தவுடன் கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களை அனுப்பி வைத்தவுடன் தானும் நேரில் வந்து பாதிக்கப்பட்டுள்ளவனுக்கு சிகிச்சை அளித்தார் மேலும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ கே செல்வராஜ் மேட்டுப்பாளையம் நகர மன்ற உறுப்பினர் திமுக மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் அஷ்ரப் அலி உள்ளிட்ட மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார்கள்
அண்மையில், ஏற்காட்டில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், தற்போது கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலையோர பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.