பல்லடம் அருகே நவகிரக கோட்டையில் குரு பெயர்ச்சி திருவிழா.

கோவை மே 2 திருப்பூர் மாவட்டம் பல்லடம், உடுமலை ரோட்டில் உள்ள சிற்றம்பலத்தில் கோளறுபது நவகிரக கோட்டைசிவன் ஆலயம் உள்ளது.இங்கு 2024 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை திருவிழா நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு விநாயகர் வேள்வி, 8:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, 11- 15 மணிக்கு மகா யாகம், மாலை 4 மணிக்கு மூன்றாம் கால வேள்வி, மாலை 5 மணிக்கு குருபகவான் மூலமந்திர வேள்வி திரவிய வேள்வி, மாலை 5 – 15 மணிக்கு குரூ பகவான் மேஷ ராசியிலிருந்து ரிசபம் ராசிக்கு பெயற்சி அடையும் நிகழ்ச்சியும், 6 மணிக்கு, பூர்ணாகுதி, தீபாராதனை 7 மணிக்கு தீர்த்த கலச அபிஷேகம் தீபாரதனை ,இரவு 8மணிக்கு குரு பகவான் திருவீதி உலா,குரு பகவான் அலங்காரம் தீபாரதனைபோன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் அனைவருக்கும் அருளாசி வழங்கினார்.விழாவில் இயற்கை வேளாண்மை விஞ்ஞானி டாக்டர். மயில்சாமி,மூத்த பத்திரிகையாளர் ஆர். பி. கருணாகரன்,கோவை தொழில் அதிபர்,கல்வித்தந்தை கருணாமூர்த்தி, சமூக சேவகர்செல்வகுமார்,டாக்டர் .சண்முக பாண்டியன்,பாஸ்கோ, காங்கிரஸ் தலைவர் இருகூர் சுப்பிரமணியம் , மற்றும் மலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.