திருமணம் நிச்சயக்கப்பட்ட காதலிக்கு கொலை மிரட்டல். காதலன் கைது.

கோவை மலுமிச்சம்பட்டி செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முகம்மது ரபீக் .அவரது மகன் அபி சுள்ளான் (வயது 26) காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் .இவர் வெள்ளலூர்ரோடு பழனியாண்டவர் கோவில் வீதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகள் சந்தியா என்ற சுருதி ( வயது 21) என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.. அவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். இதன்படிஇரு வீட்டார் சம்மதத்தின்படி வருகிற 19 -5 -24 அன்று இருவருக்கும் திருமணம் நடப்பதாக இருந்தது. இந்த நிலையில் அபி சுள்ள ன் சந்தியா சுருதியின் நடவடிக்கை சரியில்லை என்று கூறி திருமணத்துக்கு மறுத்து விட்டாராம். இது பற்றி சந்தியா, காதலன் அபி சுள்ளனிடம் கேட்டபோது அவரை தகாத வார்த்தைகளால், பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காதலி சந்தியா போத்தனூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கோமதி விசாரணை நடத்தி அபி சுள்ளனை கைது செய்தார். இவர்மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.