சூலூர் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா

சூலூர் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா சூலூர் நகரில் முன்பொரு காலத்தில் அம்மை நோய் தொற்றின் காரணமாக பொதுமக்கள் அவதியுற்று வந்தனர் அவர்கள் பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் உள்ள தீர்த்தம் மற்றும் விபூதியால் குணமடைந்து நலம் பெற்றனர் அத்தகைய சிறப்பு வாய்ந்த பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா சூலூர் நொய்யல் ஆற்றங்கரையிலிருந்து அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சக்தி மற்றும் பரிவார மூர்த்திகளுடன் 300க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் பால்குடம் கரும்புசக்கரை, கரும்புபால், திருமஞ்சனம், மஞ்சள் போன்ற தீர்த்த குடங்கள் எடுத்தனர் பத்துக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் 20 அடி முதல் 80 அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர் தொடர்ந்து மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர் பொங்கல் மாவிளக்கு கொண்டு வந்து வரிசையில் நின்று வழிபட்டனர் வருகை தந்த மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.