மூதாட்டி தூக்கில் தற்கொலை

கோவை கவுண்டம்பாளையம், அசோக் நகரை சேர்ந்தவர் நஞ்சப்பன். இவரது மனைவி அங்கம்மாள் (வயது 67) இவரது கணவரும் – மகனும் இறந்து விட்டார்கள் .அங்கம் மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அங்கம்மாள் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் நைலான் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.