அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம்

கோவை போத்தனூர் கார்மல் நகரில் உள்ள செயின்ட்.ஜோசப் முதியோர்கள் ஆதரவற்ற இல்லத்திற்கு மளிகை சாமான்கள், பவுடர் டப்பாக்கள் ,தேங்காய் எண்ணெய் ,பன்,பிஸ்கட் பாக்கெட்டுகள் ஆகியவைகளை வழங்கும் விழா நடந்தது. அஷ்லின் மரிய டி’சில்வா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். காப்பகத்தின் முதியோர்கள் ஜெபம் செய்தனர். அருட் சகோதரி.செலினா அனைவரையும் வரவேற்றார் .திரைப்பட நடிகர்.ஆர்காடியஸ் மெனோயின் டி’சில்வா குத்து விளக்கு ஏற்றி வைத்தார் .மாநில மகளிர் அணி தலைவி ஐ.கரோலின் விமலா ராணி ,மெர்சி மகளிர் சுய உதவி குழு தலைவி ஐ.பிரான்சினா, கௌரவ ஆலோசகர் இருதயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 45 ஆண்டுகால பொது சேவையையும் கோவையில் அனைத்து மத தலைவர்களோடும் மிகுந்த நட்போடு, பயணித்துக் கொண்டிருப்பதற்காக சமூக நீதியின் காவலர் எனும் விருது பெற்ற, நல மையத்தின் நிறுவனத் தலைவர் கோவை சி.எம்.ஸ்டீபன் ராஜ் காப்பக பொறுப்பாளரிடம் மளிகை சாமான்களை வழங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் தோழர்.ப.மாணிக்கம் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மற்றும் அனைத்து கிறிஸ்தவ மக்கள் மறுமலர்ச்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் கோவை.ஜேசுதாஸ், சாலமன், புஷ்பம்மாள், பிலோமினாள் உள்பட நூற்றுக்கும் மேலான முதியவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனிட்டா டி”சில்வா நன்றி கூறினார். இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நல மையத்தின் கவுரவ ஆலோசகர் அரிமா.பி.அருள் டி’சில்வா செய்திருந்தார்.