ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு.

கோவை; மேட்டுப்பாளையம் காந்திபுரம் 4 -வது வீதியைச் சேர்ந்தவர் பன்னாரி, இவரது மகன் சஞ்சய் குமார் ( வயது 24) இவர் நேற்று தனது நண்பர்கள் சிவா, விஜய் ,, அக்ஷய், ஆகியோருடன் மேட்டுப்பாளையம் , உப்பு பள்ளம் பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர்.குளித்துக் கொண்டிருக்கும் போது சஞ்சய் குமார் திடிரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார் .இது குறித்துதாயார் ஜெயா மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.