ஊரார் இடமே தன்னுடைய இடம் போலி ஆவணங்கள் போலி ஆட்களை நியமித்து ரூ 1 கோடியே 13 லட்சத்தை ஏமாற்றிய 2 கே டிகள் கைது

சமீப காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எப்படி எல்லாம் ஏமாற்றி ஏமார்ந்த இளி த்த வாயர்களை எப்படி எல்லாம் மொட்டை அடிக்கலாம் என ஒரு மோசடி கும்பல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது. இப்போது நடந்த சம்பவத்திற்கு வருவோம் சென்னை அண்ணா சாலை சிந் தாதிரிப்பேட்டை ஐயா முதலி தெரு திருப்பத்தை ஐயா மகன் பாலசுப்ரமணியம் வயது56 தாம்பரம் போலீஸ் கமிஷனர் ஆக்சன் கிங் முனைவர் அ. அமல்ராஜ் அவர்களை கண்ணீர் மல்க சந்தித்து தா ன் வீடு கட்டி விற்பனை செய்து தரும் தொழிலை செய்து வருகிறேன். கட்டுமான பணிக்காக காலி மனையை தேடிக்கொண்டிருந்தேன் அப்போது கேடிகள் பிளஸ் ரவுடிகள் தாம்பரம் நன்மங்கலம் முத்தையா நகர் பகுதியில் 2600 சதுர அடி நிலம் தங்களிடம் உள்ளது. சுவையான குடிநீர் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி சென்னை தரமணி காந்தி தெரு பார்த்தசாரதியின் மகன் தேவராஜ் வயது 42 அதே முகவரியில் வசிக்கும் பாலகிருஷ்ணனின் மகன் செல்வகுமார் வயது 43 இருவரும் கூட்டாக சேர்ந்து விற்பனைக்கு உள்ளது. அதன் மதிப்பு ரூ 1 கோடியே 13 லட்சம் என பேரம் பேசி வேறு ஒருவருக்கு சொந்தமான அந்த இடத்தை போலி பத்திரங்கள் காண்பித்து போலி ஆவணங்களை எல்லாம் காண்பித்ததோடு மட்டும் இல்லாமல் போலியான ஆட்களை செட்டப் செய்து பத்திரபதிவை எனது பெயருக்கு செய்து கொடுத்துள்ளான். பணத்தையும் பெற்றுக் கொண்டான் மோசடி செய்த மேற்கண்ட இருவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி இருந்தார் அதன் பேரில் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மத்திய குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார் அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர் ஊரை ஏமாற்றி வந்த கேடிகள் தேவராஜயையும் செல்வகுமாரையும் மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை செய்தனர் அவர்களிடமிருந்து போலி ஆவணங்களை கைப்பற்றினர் கைது செய்யப்பட்டனர். பின்பு நீதிமன்ற காவலுக்கு ஆஜர் படுத்தப்பட்ட பின் புழல் மத்திய சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டனர்.