மருதமலை கோவிலில் சாமி நகைகளை திருடிய அர்ச்சகர் கைது.

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் நிர்வாகத்தின் கீழ் பல்வேறு கோவில்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் மருதமலை ரோடு ஆலமரம் பஸ் நிலையம் அருகே உள்ள கரி வரதராஜ பெருமாள் கோவிலில் காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ வத் சாங்கன் (வயது 40) என்பவர் அர்ச்சகராக பணியாற்றி வந்தார். இந்த கோவிலையும் இந்து சமய அறநிலைத்துறை நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் ஹர்ஷினி தலைமையில் கடந்த 23ஆம் தேதி அந்த கோவிலில் நகைகளை சரி பார்க்கும் பணி நடந்தது அப்போது சாமிக்கு அணிவிக்கப்பட்ட தங்கத் தாலி மற்றும் குண்டு மணிகள் உட்பட 14 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டிருந்ததும் அதே எடைக்கு போலி நனகளை அணிவித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் துணை ஆணையர் ஹர்சினி வடவள்ளி காவல்நிலையத்தில் புகார் செய்தார் .இதை தொடர்ந்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து அர்ச்சகர் ஸ்ரீவத் சாங்கனிடம் விசாரணை நடத்தினர் அப்போது அவர சாமிக்கு அணிவிக்கப்பட்ட 14 கிராம்தங்க நகைகளை திருடி பெரிய கடை வீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்று பணம் வாங்கியதாக கூறினார் .இதை தொடர்ந்து நகைக்கடை உரிமையாளரிடம் இருந்து 14 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அர்ச்சகரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில்அர்ச்சகர் ஸ்ரீவத்சாங்கன் சென்னை புதுப்பேட்டையில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில் வேலை பார்த்த போது 8 கிராம் தங்க நகை, 7 கிலோ வெள்ளி பொருட்கள் திருடியதாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் 60 நாள் சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது தெரியவந்தது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்..