சமண மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மகாவீரர் ஜெயந்தி. நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் கடைபிடிக்க கொண்டாடப்படும் இந்த விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை ரங்கை கவுடர் வீதியில் உள்ள சுபார்ஸ்வநாத் ஜெயின் கோவில் மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு சுவாமி ஊர்வலம் நடந்தது, ஜெயின் சமூகத்தினர் சிறப்பு ஊர்வலம் மேற்கொண்டனர். இதில், பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என அனைத்து வயதினரும் பங்கேற்றனர். ஒருவா் பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றின் சுழற்சியில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்றால் ஆன்மீகத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்று மகாவீரா் கற்பிக்கிறாா். இல்லற வாழ்க்கையில் ஈடுபடுபவராக இருந்தாலும் அல்லது துறவற வாழ்க்கையில் ஈடுபடுபவராக இருந்தாலும் ஒருவா் ஆன்மீக அமைதியைப் பெற வேண்டும் என்றால் 5 விரதங்களை அல்லது 5 உறுதிமொழிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று சுவாமி மகாவீரா் கூறுகிறாா். 1. அகிம்சை (வன்முறை இல்லாமை), 2. சத்யம் (உண்மை), 3. அசத்தேயா (திருடாமை), 4. பிரம்மச்சாாியா (பாலியல் உறவில் இருந்து விடுபட்டு இருத்தல்), 5. அபாிகிரகா (பற்றின்மை) போன்றவை ஆகும். நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் கடைப்பிடிக்க மகாவீர் ஜெயந்தி மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மகாவீரரின் போதனைகள் அவரது சீடர்களிடையே பிரசங்கங்களாக பரவுகின்றன. மகாவீர் ஜெயந்தி என்பது உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு புனிதமான பண்டிகையாகும். குதிரைகள், யானைகள், தேர்கள், கோஷமிடுபவர்கள் உட்பட பெரிய ஊர்வலங்கள் நடத்தப்படும். மேலும் ஜெயின் துறவிகள் மகாவீரர் வகுத்த ஜைன மதக் கொள்கைகளைப் பற்றி பேசும் சொற்பொழிவுகளை வழங்குகிறார்கள். ஜெயின் சமூகத்தவருக்கு மகாவீரா் ஜெயந்தி தான் புத்தாண்டின் தொடக்கமாகும்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0