2பைக்குகள் மோதல் ஒருவர் சாவு

கோவை அருகே உள்ள பாப்பம்பட்டி – இடையர்பாளையம் ரோட்டில் நேற்று இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டன. இதில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தபள்ளபாளையம், மணியக்கார வீதியைச் சேர்ந்த கார்த்திக் ( வயது 37) படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். இது குறித்து அவரது மனைவி காமாட்சி சூலூர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மற்றொரு பைக் ஓட்டி வந்த திண்டுக்கல் ரஞ்சித் ( வயது 22 )என்பவரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.