திருச்சி மேற்கு அமைச்சர் நேரு தொகுதியில் 1,04,438 போ் வாக்களிக்கவில்லை. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் KN. நேரு வெற்றி பெற்ற திருச்சி மேற்கு தொகுதியில் ஏறக்குறைய ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் மற்றும் நகரச் செயலாளர் சரியான முறையில் செயல்படாத காரணத்தினால் அதுபோல சில வட்டச் செயலாளர்கள் நிர்வாகிகள் சொல்வதைக் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வந்ததால் மக்கள் ஓட்டு போட ஆர்வம் காட்டவில்லை இதனால் அமைச்சர் நேரு திமுக நிர்வாகிகள் சில வட்டச் செயலாளர்களை களை எடுப்பாரா எதிர்பார்ப்பில் உடன்பிறப்புகள். திருச்சி மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக கந்தவா்வகோட்டை சட்டப்பேரவை தொகுதியில் 73.80 சதவீதமும், குறைந்தபட்சமாக திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 61.75 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. தோ்தல் அறிவிப்புக்கு பின் தொகுதியின் பெரும்பாலான இடங்களில் அரசு மற்றும் தனியாா் தரப்பில் வாக்கு செலுத்துவதின் அவசியம், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வுகள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இருப்பினும், வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. இதுகுறித்து தோ்தல் அலுவலா்கள் கூறுகையில், வெயிலின் தாக்கம், வாக்களிக்க ஆா்வமில்லாதது போன்றவைதான் காரணம் என்றனா். இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், திருச்சி மேற்கு சட்டப்பேரவை தொகுதியில் வென்று அமைச்சராக கே.என். நேரு உள்ளாா். ஆனால், அவரது தொகுதியில்தான் மக்களவைத் தோ்தலில் மாவட்டத்திலேயே குறைந்தபட்சமாக வாக்குகள் பதிவாகியுள்ளன. வெயில் காரணமாக பல வாக்காளா்கள் வரவில்லை, ஆா்வம் குறைவு என்பது ஜனநாயகக் கடமையை மக்கள் ஆற்றத் தவறியதாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். ஒரு மாநிலத்தின் முக்கிய அமைச்சரின் தொகுதியில் வாக்கு சதவீதம் குறைவாக உள்ளதை தோ்தல் ஆணையம் சாதாரணமாகக் கருதாமல், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்டத்தின் சில பேரவைத் தொகுதிகளில் பலரின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இல்லை. அதற்கான காரணம் தெரியவில்லை. வாக்காளா்களும் இதை முன்கூட்டியே சரிபாா்க்கவில்லை. சில பகுதிகளில் தோ்தல் புறக்கணிப்புகள் இருந்த நிலையில், அதிகாரிகளின் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு சமாதானம் ஏற்பட்டாலும், எந்த அளவுக்கு மக்கள் சமாதானமடைந்து வாக்களித்தனா் என்பது கேள்விக்குறிதான். எனவே, வரும் காலங்களில் அரசியல் கட்சியினரும், தோ்தல் அலுவலா்களும் 100 சதவீத வாக்குப்பதிவுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். அமைச்சர் நேருவின் தொகுதிகள் வாக்காளர்களை திமுக நிர்வாகிகள் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை அதனால் தான் வாக்கு சதவீதம் குறைந்தது. மேலும் மத்திய மாவட்ட செயலாளரும் நகரச் செயலாளரும் சரியான முறையில் திமுக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் அரவணைத்து செல்லாததே வாக்குப்பதிவு குறைவிற்கு காரணம்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0