நீலகிரி மாவட்டம்,பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவான மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில், பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவான மின்னணு இயந்திரங்கள் தேர்தல் பொதுபார்வையாளர் மஞ்சித் சிங் பரார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேலு, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் காவல்துறையினர் உள்ளனர்.