கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு உடையணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் காலியாக உள்ள அனைத்து நிலை அமைச்சு பணியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலியாக உள்ள 117 பதிவறை எழுத்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள நேர்முக உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். சாப்ட்வேர் குறைபாடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பணியின் போது கருப்பு உடையணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் பணியாளர்களின் பதவிகள் மற்றும் பதவி உயர்வுகளை ஒலிக்கும் போக்குவரத்து ஆணையர் அவர்களின் நடவடிக்கைகளை கண்டிப்பதோடு போக்குவரத்து துறையில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டாலும் பொதுமக்கள் தொடர்பான பணிகள் மேலும் அதிகரித்து வருவதால் பணியாளர்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவே அமைச்சு பணியாளர்களின் எண்ணிக்கையினை எக்காரணம் கொண்டும் குறைக்க கூடாது எனவும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பணி இனத்தை நிரப்புவதோடு தற்போது இருந்து வரும் நடைமுறையே தொடர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.