கோவை தொண்டாமுத்தூர் ரோடு ஜெயலட்சுமி நகரில் உள்ள ஒரு மளிகை கடை அருகே வடவள்ளி போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார். அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 22 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தொண்டா புத்தூர் ஊளியம் பாளையம், ஸ்ரீவாரி கார்டனைச் சேர்ந்த கோவிந்தராஜ பிரபு ( வயது 38 )லட்சுமி நகர் ,குகன் கார்டனை சேர்ந்த விக்னேஷ் குமார் (வயது 27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆம்னி காரும், 2 செல்போன்பறிமுதல் செய்யப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0