வீட்டின் முன் கோலம் போட்ட பெண் டாக்டரிடம் செயின் பறிப்பு

கோவை அருகே உள்ள மணியக்காரன் பாளையம், திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி பேபி கவிதா ( வயது 52 )இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராகவேலை பார்த்து வருகிறார். நேற்று காலை 5 – 30மணிக்கு இவரது வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 7பவுன் தாலி சங்கிலியை பறித்தனர். அப்போது செயினைஅவர் இறுக பிடித்துக் கொண்டார். இதனால் தாலி செயின் அறுந்து 4 பவுன்நகையுடன் கொள்ளையர்கள்தப்பி ஓடிவிட்டனர். 3 பவுன் செயினைடாக்டர் பேபி கவிதா இருக பிடித்துக் கொண்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.