கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் வாசிர் உசேன்,இவரது மனைவி நரின் பானு ( வயது 50) இவர்களுக்கு திருமணம் முடிந்து 30 ஆண்டுகள் ஆகிறது.திருமணத்தின் போது ரூ 25 லட்சம் ரொக்கமும், 150 பவுன் நகையும் வரதட்சணையாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் வரதட்சணை வாங்கி வருமாறு கோரி மனைவியை கொடுமை படுத்தினாராம். தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். இந்த நிலையில்கணவர் வாசிர்உசேன் சென்னைக்குச் சென்று அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும்முதல் மனைவி குடியிருக்கும் வீட்டை காலி செய்யுமாறு கோரி மிரட்டுகிறார்களாம். இதுகுறித்து நரீன் பானுகோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரோஜா விசாரணை நடத்தி கணவர் வாசிர் உசேன் அவரது 2-வது மனைவி கலா ஆகியோர் மீது வரதட்சனை கொடுமை ,மிரட்டுதல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0