கோவை அருகே அணையில் மூழ்கி 2 மாணவர்கள்சாவு.

கோவை கவுண்டம்பாளையம், அசோக் நகர், யூனியன் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்.இவரது மகன் லக்ஷித் (வயது 16) அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் . இவரது மகன்சரவணன் (வயது 17)இவர்கள் இருவரும் தனியார் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்து வருகிறார்கள்.நேற்று விடுமுறை 7 நண்பர்களுடன்ஈஷா யோகா மையத்துக்கு சென்றனர் பின்னர் அங்கிருந்து வீடு திரும்பும் வழியில் நரசிபுரம் – ஈசாரோடு, புதுக்காட்டு வாய்க்கால் அணைக்கட்டு பகுதிக்கு குளிக்க சென்றனர்.  ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர் அப்போது லட்சித் , சரவணன் ஆகியோர் திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர்.நீச்சல் தெரியாததால் நீரில் தத்தளித்து,மூழ்கி இறந்தனர். இது குறித்து ஆலாந்துறை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து சென்று நீரில் மூழ்கிய லக்சித் ,சரவணன் ஆகியோரத…