குளத்தில் குதித்து வியாபாரி தற்கொலை

கோவை சின்ன தடாகம் ரோட்டில் உள்ள வீரபாண்டி புதூரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் ( வயது 56) பழைய பொருட்கள் வியாபாரம் செய்து வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடன் தொல்லையால் அவதிபட்டு வந்தார் இந்த நிலையில் 6 – ந்தேதி வெளியே சென்ற தமிழ்ச்செல்வன் வீடு திரும்பவில்லை. நேற்று குறிச்சி குளத்தில் அவர் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து அவரது மனைவி சங்கீதா போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.