வெயில் தாக்கத்தை தணிக்கஆர் கே தேவேந்திரன் நாடார் டிரஸ்ட் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.

கோவை ஆர் .எஸ் .புரத்தில். உலக வர்த்தகரும்,கோவை நாடார் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஆர் கே தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளை சார்பில் கோடை வெயில் தாக்கத்தை தணிக்க ஆண்டு தோறும் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு தினமும் ஆயிரம் பேருக்கு நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது..இதேபோல ஆர்.கே. தெயவேந்திரன் நாடார் டிரஸ்ட் தலைமை அலுவலகம் முன் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் தெய்வேந்திர நாடார் அறக்கட்டளை அறங்காவலர்கள் கலைச்செல்வி தெய்வேந்திரன், ரத்தினமாலா ராஜேஷ் குமார் ,அகிலேஷ் குமார், ஆதித்யா ராஜேஷ் குமார்,ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கிதொடங்கி வைத்தார்கள்.இதில் கோவை நாடார் சங்க உறுப்பினர்கள் ஆர் கே. தெயவேந்திரன் நாடார் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் தேவேந்திரன் நிறுவனங்களின் அலுவலக ஊழியர்கள் ,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.