நீலகிரி,கோத்தகிரி பகுதியில் வேட்பாளர் ஆ. இராசா வை ஆதரித்து திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி பிரச்சாரம்

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஆ.இராசா B.Sc.,ML., அவர்களை ஆதரித்து, கோதகிரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்,  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்,
உடன் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக், தேர்தல் பணி செயலாளர் கா.ராமச்சந்திரன், திராவிடர் கழக காப்பாளர் மருத்துவர் கௌதமன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கணேஷ் MLA, சிபிஐ மாநில குழு உறுப்பினர் பெள்ளி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மன்னரசன் உட்பட திமுக தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர், தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்