போன்பே, கூகுள்பே மூலம் ATM-ல் பணம் செலுத்தும் வசதி.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஏடிஎம் இயந்திரங்களில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை கொண்டுவர உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் தற்போது வரை டெபிட் கார்டுகள் மூலம் பணம் டெபாசிட் செய்து வரப்படும் சூழலில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ஏடிஎம் கார்டு இல்லாமல் யுபிஐ மூல பணம் எடுக்கும் முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக யுபிஐ மூலம் பணம் டெபாசி செய்யவும் ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களில் வசதியை மேம்படுத்துவதோடு வங்கிகள் பணத்தை கையாளுவதற்கும் உதவியாக இருக்கும் என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருப்பது மட்டுமன்றி வங்கிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக வாடிக்கையாளர் பணத்தை டெபாசிட் செய்ய வங்கிகளில் நேரத்தை செலவிடுவதை தவிர்க்க இது உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.