திமுக என்ற தீய சக்தியை ஒழிக்க வேண்டும் திருச்சியில் எடப்பாடி ஆவேச பேச்சு.

திருச்சி உழவர் சந்தையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது இந்தியா கூட்டணியினர் மத்தியில் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று பகல் கனவு காண்கிறார்கள் இன்டியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கப் போகிறது என்கிறார் முதல்வர் ஸ்டாலின். திமுக கூட்டணி முதன்மையாக விளங்குவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். இன்டியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை, பிரதமர் வேட்பாளரை தெரிவிக்கவில்லை. வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து, கம்யூ. கட்சியைச் சேர்ந்தவர் போட்டியிடுகிறார். சின்னத்தை முடக்க வேண்டுமென சிலர் முயற்சி செய்தனர். மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக. திமுக என்ற தீய சக்தியை ஒழிக்க வேண்டும். 3 ஆண்டு திமுக ஆட்சியில், மூன்றரை லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். 3 ஆண்டு திமுக ஆட்சியில் ஒரு மருத்துவ கல்லூரிகூட அமையவில்லை. அதிமுக ஆட்சியில் மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக. எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்த மாவட்டம் திருச்சி. காவிரி பாயும் பசுமை நிறைந்த மாவட்டம் திருச்சி.
14 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இருந்த திமுக தமிழகத்திற்கு என்ன செய்தது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது ஸ்டாலினுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. ஆட்சி அதிகாரம் எங்களுக்கு முக்கியமில்லை. மக்கள் முக்கியம் என்பதாலேயே பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகினோம். மரத்திற்கு மரம் தாவுவது போல் பா.ஜ.க., காங்கிரஸ் என்று கூட்டணி அமைத்து மத்தியில் பதவி வகித்தது திமுக. தமிழகத்தில் செல்வாக்கு இழந்த ஸ்டாலின் இன்டியா கூட்டணி என்ற போர்வையில் தேர்தலை சந்திக்கிறார். அதிமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பலன்பெற கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு நிறுத்தி, மாநிலத்தை சீரழித்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்வில் ஏராளமான அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.