10-ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை

கோவை,ரத்தினபுரி பெரியசாமி லே – அவுட்டை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மகன் தீபிகா ( வயது 14) ரத்தினபுரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக் கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்..நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் நைலான் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து இவரது தாயார் ஈஸ்வரி ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.