நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி பாராளுமன்ற கழக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் அவர்களை ஆதரித்து எதிர்கட்சி தலைவரும் அதிமுக கழகபொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நீலகிரி மாவட்டம் குன்னூர் உதகைக்கு வருகை புரிந்தார், தேர்தல் பிரச்சார கூட்டத்தை நீலகிரி அ திமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி டி வினோத் தலைமையில்
முன்னாள் அமைச்சரும் நீலகிரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் எஸ் பி வேலுமணி அவர்கள் முன்னிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உதகைக்கு வருகை புரிந்தார், அவர்களை வரவேற்கும் விதமாக மாவட்ட தலைவர் கப்பச்சி வினோத் படுகர் சமுதாயத்தின் பாரம்பரிய சீலை போர்த்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார், அதனைத் தொடர்ந்து, சரியாக காலை 12 மணி அளவில் உதகை சேரிங் கிராஸ் முதல் ஏடிசி திடல் வரை கழகத் தோழர்கள் சாலையில் இருபுறமாக நின்று கழகப் பொதுச் செயலாளர் அவர்களை வரவேற்கும் விதமாக கோஷங்கள் எழுப்பி வரவேற்றனர், உதகை ஏடிசி திடலில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நீலகிரி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீலகிரி
மாவட்ட செயலாளர் கப்பச்சி டிவினோத் கழக அமைப்புச் செயலாளர் கே ஆர் அர்ஜுனன் முன்னாள் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் ஆ சாந்தி ராமு கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெய்சீலன், பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், மாநில இளைஞரணி செயலாளர் பாலநந்தகுமார் நீலகிரி மாவட்ட பாசறை செயலாளர் ஹக்கீம் பாபு, குந்தா ஒன்றிய செயலாளர் சக்சஸ் சந்திரன், மற்றும் மகளிர் அணியினர் ஆகியோர்களின் முன்னிலையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர், உடன் நகர செயலாளர் கா சண்முகம் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் கே கே மாதன் உதகை ஒன்றிய செயலாளர் குமார் கீழ்குந்தா ஒன்றிய செயலாளர் டி பெள்ளி ஒன்றிய செயலாளர் சச்சந்திரன் எப்பநாடு ஊராட்சித் தலைவர் சிவக்குமார்நொண்டி மேடு வார்டு நம்பர் 32 கிளைக் கழக செயலாளர் கார்த்திக் ஊராட்சி ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் ஜெயபால் நீலகிரி மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் கல்லகொரைபாபு தொழில்நுட்ப பிரிவு அன்பு நகர மன்ற உறுப்பினர் அன்பு, மகளிர் அணி மாவட்ட துணைச் செயலாளர் பிரமிளா, நகர இணைச்செயலாளர் ஷர்மிளா, மற்றும் பலர் கலந்து கொண்டனர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தொழிற்சங்க நிர்வாகிகள் தொண்டர்கள். மற்றும் கூட்டணி கட்சிகள் தேமுதிக, புதிய தமிழகம், முஸ்லிம் முன்னேற்ற கழகம், நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவிக்கும் விதமாக அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டனர், அதிமுக கழகத்தைச் சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் கழகத் தொண்டர்கள் உதகை கூடலூர் கோத்தகிரி குன்னூர் போன்ற இடங்களில் இருந்து திரளாக வந்து முன்னாள் முதல்வரும் கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்களின் தேர்தல் பிரச்சார உரையைக் கேட்க 12,000 திற்கும் மேலான மக்கள் ஏடிசி திடல் முழுவதும் திரளாக கூடியிருந்து தங்களது ஆதரவை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் அவர்களுக்கு வாக்கு சேகரிக்க இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றிய போது மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் இந்த நீலகிரி மாவட்டத்தை அதிகமாக நேசித்த நமது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் என்று கூறினார், நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் வந்து தங்கும் பொழுது படுகர் சமுதாய மக்களை அவ்வப்போது சந்தித்து அவர்களோடு நட்பு கொண்டவர் நமது முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் என்று உரையாற்றினார்,நமது வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் அவர்களை வெற்றி பெற செய்தால் நாங்கள் மத்திய அரசிடம் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வலியுறுத்தி நிச்சயமாக செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார், மற்றும் நீலகிரி மாவட்டம் இந்தியாவிலேயே சிறந்த ஒரு சுற்றுலா தளமாக உள்ளதால் இந்த நீலகிரி மாவட்ட சுற்றுலாத்தலத்தை இன்னும் அதிகமாக பராமரிக்கப்பட்டு ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக ஏற்படுத்துவோம் என்று கூறினார், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு நீலகிரி மாவட்டத்திற்கு ஏதாகினும் ஒரு நலத்திட்டம் ஆவது செய்துள்ளதா என்று கேள்வி எழுப்பினார், மற்றும் நீலகிரி உதகையில் ஒரு சிறப்பான மருத்துவமனை வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது நான் முதலமைச்சராக இருந்தபோது உதகை மக்களுக்கு நானூறு கோடி மதிப்பில் உதகையில் மருத்துவக் கல்லூரியும் மருத்துவமனையும் கட்டமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது என்று குறிப்பிட்டார், டேன்டி நிர்வாகத்தை தனியாருக்கு தாருவார்க்க சதி திட்டம் செய்யும் திமுக அரசிடமிருந்து 5300 ஏக்கரை காப்பாற்ற வேண்டுமென்றால் நம்மிடத்தில் அதிமுக ஆட்சி மலர வேண்டும், நமது சின்னம் இரட்டை இலை சின்னம் வாக்களிப்போம் இரட்டை இலைக்கு என்று மக்களோடு மக்களாக இணைந்து கோஷங்கள் எழுப்பி உங்கள் வாக்கை நமது வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் ரெட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற சைக்கிள் என்று விடை பெற்றார்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0