தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி ஆக்சன் நாயகி ஒரு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார் அந்த உத்தரவில் கூறி இருப்பதாவது ஓடும் ரயில்களிலோ ரயில் நிலையங்களிலோ நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் பணமோ பொருட்களோ கொண்டு வருவது சட்டப்படி குற்றமாகும் அவற்றை உடனடியாக பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார் அதன் பேரில் ரயில்வே போலீஸ் டி.ஐ.ஜி ராமர் சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துணை சூப்பிரண்ட் கர்ணன் மேற்பார்வையில் புவனேஸ்வரில் இருந்து வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலை ராஜமுந்திரியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் 6 வது பிளாட்பாரம் ற்கு வந்து நின்றது அதில் வந்த பயணி ஒருவர் சந்தேகப்படும்படி வந்தார் அவரை சென்னை ஹார்பர் உதவி செயற்பொறியாளர் பறக்கும் படை அதிகாரி கோபி மகளிர் சிறப்பு உதவி ஆய்வாளர் உமா தலைமை காவலர் சபி காவலர் தியாகராஜன் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் காவலர் முகிலன் மகளிர் பெண் போலீஸ் பாக்கியலட்சுமி ஆகியோர் 53 வயது மதிக்கத்தக்க கோலி வெங்கட சத்திய நாராயணா தகப்பனார் பெயர் வீரபத்திர ராவ் வங்க வேதி வரி வீதி ராமாலயம் அருகில் சீதம் பேட்டா ராஜமுந்திரி கிழக்கு கோதாவரி மாவட்டம் ஆந்திர பிரதேசம் இவரிடமிருந்து கட்டு கட்டாக எந்தவித ஆவணமும் இன்றி ரூபாய் 15 லட்சத்து 80 ஆயிரத்தை வைத்திருந்ததை கண்டுபிடித்தனர் இந்த பணம் யாருடையது எதற்காக சென்னைக்கு கொண்டுவரப்பட்டது துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்
கைப்பற்ற பட்ட பணம்15 லட்சத்து 80 ஆயிரத்தை பத்திரமாக அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0