காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றங்களை அடியோடு தடுத்து நிறுத்திட இரவு பகல் பாராமல் ரோந்து பணிகள் போலீஸ் மூலம் தீவிர படுத்தப்பட்டுள்ளது இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் விஷ்ணு காஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பி எஸ் கே தெ ரு பாண்டுரங்கன் பெருமாள் கோவில் அருகே ஏட்டு நித்தியானந்தம் என்பவர் tn11 b f 6226 என்ற எண்ணுள்ள ஆட்டோவை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் ஆட்டோவில் உட்கார்ந்து இருந்த ஏகா என்கிற ஏகாம்பரம் வயது 48 தகப்பனார் பெயர் ஆறுமுகம் ஊரப்பாக்கம் சென்னை ஆட்டோ டிரைவர் விக்னேஷ் தகப்பனார் பெயர் ரவி வண்டலூர் செங்கல்பட்டு ஆகியோரை போலீஸ் பாணியில் விசாரிக்கும் போது சரியான பதில் சொல்லாததால் கையில் இருந்த லத்தியை எடுத்து மிரட்டி சோதனை போட்டார் பையில் ரொக்க பணம் தங்க நகைகள் வெள்ளி நகைகள் இருந்ததை கண்டுபிடித்தார் மேலும் அவர்களை காவல் நிலையத்திற்கு துப்பாக்கி முனையில் அழைத்து வந்து கி டுக்கி பிடி போட்டு தீவிர விசாரணை நடத்தினார் விசாரணையில் ஆனைகட்டி தெருவில் வசிக்கும் ஓய்வு பெற்ற தாசில்தார் சீனிவாசன் வீட்டில் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே இருந்த 111/2 சவரன் தங்க நகைகள் 679 ராம் வெள்ளி பொருட்கள் ரொக்க பணம் ரூ 2 லட்சத்து10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்தது தெரியவந்தது இந்த கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் கொள்ளைக்காரன் ஏ கா என்கிற ஏகாம்பரம் என்பவன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது இந்த வழக்கில் திறமையாக துப்புத் துலக்கி காவல்துறையின் பாராட்டுதலை பெற்ற ஏட்டு நித்தியானந்தத்தை காவல்துறையின் தலைமை இயக்குனர் படை த்தலைவர் சங்கர் ஜிவால் தலைமை அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டு சான்றிதழ் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0