கோவை; தர்மபுரி மாவட்டம் மகேந்திரபுரத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 43) இவர் கோவை விளாங்குறிச்சி, காந்தி வீதியில் தங்கிருந்து கட்டிட உபயோகப் பொருட்கள் கடை நடத்தி வந்தார். இவரது கடையில் வேலை பார்த்து வந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து கோவில் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சுப்பிரமணியை போக்சோ சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரை குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு போலீஸ்சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பரிந்துரை செய்தார். இதன் பேரில் சுப்பிரமணியனை குண்டர் சட்டத்தின் கீழ்கைது செய்ய கலெக்டர்உத்தரவு பிறப்பித்தார். இதை யடுத்து அவர்குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதற்கான உத்தரவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு நேற்று வழங்கப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0