கோவை கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை.

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம், சிவராம் நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் இவரது மகன் ஹரி பிரகாஷ் ( வயது 20) சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ( சி .எஸ் )இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று அவரது வீட்டில் உள்ளபடுக்கை அறையில் கதவை உள்பக்கம் தாழ் போட்டுக்கொண்டு மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் மகேஸ்வரி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.