கோவை ராமநாதபுரம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி 2 பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் நகையை பறித்து சென்றார். கடந்து 8 -ந் தேதி சுந்தராபுரம் காவல் நிலைய பகுதிகளிலும்,18 ஆம் தேதி ராமநாதபுரம் மற்றும் போத்தனூர் பகுதிகளிலும்என மொத்தம் 5 பெண்களிடம் 114 கிராம் நகைகளை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் பறித்து சென்றார்.. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் 600க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர் .இதில் இந்த 5 நகை பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர் என்பது அதற்கு அவர் ஒரே மோட்டார் சைக்கிளை பயன்படுத்தியதும் தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி திருப்பூரில் பதுங்கி இருந்த கொள்ளையன் வேதமணி (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 116 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டது..இதுகுறித்து போலீசார் கூறியதாவது :- நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வடமலையைச் சேர்ந்தவர் வேதமணி. இவர் சூலூரில் தங்கி டிப்ளமோ படித்துள்ளார். தற்போது திருப்பூரில் இருக்கும் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு கோவைக்கு வந்து நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது போலீசாரிடம் சிக்காமல் இருக்க மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளேட்டை அடிக்கடி மாற்றி வந்துள்ளார். வேதமணியை பிடிக்க 600 கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தோம் .இவர் மீது திருப்பூர், நாகப்பட்டினத்தில், நகைவழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் பெண்களிடம் பறித்த நகையை அடகு வைத்துஅதில் கிடைத்த பணத்தில் சொந்த ஊரில் சிறிய வீடு கட்டியுள்ளார். மேலும் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து உள்ளார் .இவர் அவர்கள் கூறினார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0