கோவைரேஸ்கோர்சில் கிறிஸ்தவ தேவாலயம் உளளது..இந்த ஆலயத்தின் செயலாளராக இருப்பவர் ஆர். ஏ. பிரபாகர். இவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில்அவர் கூறியிருப்பதாவது:- ஆலய கட்டுப்பாட்டை மீறியதாக சஸ்பென்ட் செய்யப்பட்ட பாதிரியார் சார்லஸ் சாம்ராஜ், உதவி பாதிரியார் ராஜேஷ் உட்பட சிலர் நேற்று முன்தினம் ஆலயத்துக்குள் அத்துமீறி புகுந்தனர். அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா,இருக்கைகள் ,ஒலிபெருக்கி மைக் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தினார்கள் பின்னர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.இவ்வாறு அதில் கூறியுள்ளார் . ரேஸ் கோர்ஸ் போலீஸ்இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார், சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேய பாண்டியன்ஆகியோர்நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்..இது தொடர்பாக பாதிரியார்கள் சார்லஸ் சாம்ராஜ், ராஜேஷ்ஆகியோரை நேற்று அதிகாலை 3 மணிக்கு கைது செய்தனர். இவர்கள் மீது சேதப்படுத்துதல்,கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர்களுக்கு ஆதரவாகரேஸ்கோர்சில் உள்ள கலெக்டர் பங்களாவை முற்றுகையிட சென்றசவுரிபாளையம் ரோடு, செந்தில் நகரை சேர்ந்த பேராசிரியர்பெஞ்சமின் (வயது 42 )உட்பட 13 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாககைது செய்யப்பட்டனர்.இவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. .கைது செய்யப்பட்ட பாதிரியார்கள் சார்லஸ் ராம்ராஜ் ,ராஜேஷ் ஆகியோர் நீதிபதி முன்ஆஜர் படுத்தப்பட்டனர்.இவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.இதை யடுத்துபோலீசார் பாதுகாப்புடன் 2பாதிரியார்களையும் அழைத்துசென்று மத்திய சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவத்தையொட்டி அந்த கிறிஸ்தவ ஆலயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0