கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். ரூ 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்பவர்கள் பிடிக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தப்படுகிறது. சரியான காரணங்களை கூறினால் பணம் திரும்ப ஒப் படைக்கப்படுகிறது. கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை ரூ. 3 கோடியே 57 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் பணம் -மது பாட்டில்கள், கஞ்சா தங்கம், பரிசு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் அடங்கும். நேற்று முன்தினம் ரூ 9 லட்சத்து23 ஆயிரத்து 484 பறிமுதல் செய்யப்பட்டது. தொண்டாமுத்தூர் தொகுதியில் 634 சேலைகள்பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு மட்டும் ரூ 2 லட்சத்து 50ஆயிரம் இருக்கும். மேலும் அரை கிலோ கஞ்சா உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் ரூ.1கோடியே 59 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் திரும்ப ஒப்டைக்கப்பட்டுள்ளன.. இந்த தகவலை கோவை நாடாளுமன்ற தேர்தல் பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0