கோவையில் வந்து மாட்டிக் கொண்டார் அண்ணாமலை – துடியலூரில் கனிமொழி பிரச்சாரம்.

கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே தி.மு.க கோவை பாராளுமன்ற வேட்பாளர் கணபதி ராஜகுமாரை ஆதரித்து கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தளபதி ஆதரவு பெற்ற வேட்பாளர் ராஜ்குமார் என்றார். இந்த தொகுதியில் நாம் தெளிவாக ஓட்டு போட வேண்டும் எனவும் தவறாக சென்றால் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்றார். சொந்த தொகுதியில் நின்றால் விரட்டி விடுவார்கள் என்று புதிதாக தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுகிறார் எனவும் இங்கு வானதியின் சப்போர்ட்டில் வெற்றி பெற்று விடலாம் என கணக்கு போட்டு களமிறங்குகின்றார் எனவும் கணக்கு தப்பாக போய் கோயம்புத்தூரில் மாட்டிக் கொண்டு இருக்கிறார் அண்ணாமலை என்றார். அண்ணாமலை மூன்றாவது இடத்திற்கு போட்டியிடுகின்றார். தி.மு.க வெற்றி அசைக்க முடியாத உண்மை எனத் தெரிவித்தார். மருதமலையில் கரண்ட் தரவில்லை என்று சொன்னார், தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே கரண்ட் தந்து விட்டது. கலைஞர் தந்த கோட்டோவில் தான் அண்ணாமலை படித்து இருக்கின்றார். உண்மையை ஒத்துக் கொள்ளுங்கள் (பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு)
போய் செய்திகளை வெளியிடவே பா.ஜ.க வில் தனி அமைப்பு வைத்து இருக்கின்றனர் எனவும் கூறினார். ஒவ்வொரு இடத்திலும் பொய்யான செய்திகளை பரப்பி மக்களுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்கி பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியாது வாழக் கூடாது என்ற நிலையை பா.ஜ.க ஏற்படுத்தி இருக்கின்றனர் என்றார். தமிழ்நாட்டில் நிம்மதியாக நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் நம் பிள்ளைகள் வசதியாக மரியாதையாக நல்ல வேலை கிடைத்து அடுப்படி வசதியுடன் வாழ வேண்டும் என்பது தமிழ்நாட்டில் உள்ளவர்களின் கனவு எனக் கூறிய அவர் மணிப்பூரில் உள்ளவர்களின் கனவு தங்கள் பிள்ளைகளை உயிரோடு பார்ப்போமா என்பதாக இருக்கிறது. இது ஒரு சுதந்திரப் போராட்டம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது . பாரத் மாதா கி ஜே என்று சொல்லும் இவர்களில் ஆட்சியில் பெண்களின் நிலை என்ன? மணிப்பூரில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இருக்கின்றார்கள். பிரதமர் இது குறித்து கேட்டிருக்கின்றாரா ? மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு நடந்த தவறுகளை தட்டிக் கேட்க வேண்டும் என போராடினர் என்றார். என்ன தவறு செய்தாலும் எல்லாத்தையும் அவர்கள் பாதுகாப்பார்கள் எதிர்த்து கேள்வி கேட்டால் பா.ஜ.க வினர் மிரட்டுவார்கள். சேலத்தில் இருந்த இரண்டு விவசாயிகள் பி.ஜே.பி க்கு பிரமுகருக்கு எதிராக செயல்பட்டதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். தேர்தல் பத்திரத்தை கண்டுபிடித்து அதனை சட்டம் பூர்வமாக்கி, முக்கால்வாசி தேர்தல் பத்திரம் பா.ஜ.க வினருக்கு தந்து இருக்கின்றனர் எனவும், அமலாக்கத் துறை அதிகாரிகள் ரைடு விட்டு தேர்தல் பத்திரம் வாங்கி இருக்கின்றனர் எனவும், கோடக் மகேந்திரா நிறுவனத்தில் விசாரணை நடந்து கொண்டு இருந்த பொழுதே 10 கோடிக்கு தேர்தல் பத்திரம் பா.ஜ.க வினருக்காக வாங்குகின்றனர் என்றார். இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரிசர்வ் வங்கி பா.ஜ.க வினர் கேட்டதற்கு ஒப்புக் கொள்கின்றன தேர்தல் பத்திரம் ஒரு சட்ட பூர்வமான ஊழல். இதில் பா.ஜ.க வினர் ஊழல் பற்றி பேசி வருகின்றனர். டெல்லி முதல் மற்றும் துணை முதல்வரை சிறையில் வைத்து இருக்கின்றனர். விவசாயிகளுக்கு தொழிலாளர்களுக்கு சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் இவர்கள் அமல்படுத்து இருக்கின்றனர் என தெரிவித்தார். பா.ஜ.க வின் இது போன்ற கொடிய திட்டங்களுக்கு துணை நின்றவர்கள் அ.தி.மு.க வினர். இன்று அவர்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கின்றார் அதனை நம்ப வேண்டாம் மக்களுக்கு நடந்த கொடுமை அனைத்துக்கும் அ.தி.மு.க விற்கு பங்கு உண்டு இரண்டு ஸ்டிக்கரும் சேர்ந்து மீண்டும் ஒட்டிக் கொள்ளும் தி.மு.க தலைவர் உட்பட அனைவரும் பா.ஜ.க வையும் கேள்வி கேட்கின்றனர். விமர்சிக்கின்றனர். தி.மு.க, அ.தி.மு.க இடையே போட்டி பி.ஜே.பி பாவம் நானும் இருக்கே நானும் இருக்கேன் என சொல்லிக் கொண்டு இருக்கிறனர் இதுவரை எடப்பாடி பழனிச்சாமி ஒரு முறையாவது பிரதமரை எதிர்த்து பேசி இருக்கின்றாரா என கேள்வி எழுப்பினார். தி.மு.க அரசாங்கத்தை பற்றி மட்டுமே பேசும் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடி பற்றி பேசவில்லை. பிரதமர் முன்பாக கை கட்டி நிற்க வேண்டும் என்பதனால் இதுவரை பேசவில்லை. 2 கோடி பேருக்கு வேலை தருவதாக பிரதமர் மோடி சொன்னார் வேலை கேட்டால் பக்கோடா போடுங்கள் என்று சொல்கின்றார். 68,700 கோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் ரத்து செய்து இருக்கின்றார்கள…