கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன் ( வயது 31) இவர் நல்லாம்பாளையம் ரோட்டில் உள்ள ராமலிங்கம் என்பவரது டீக்கடையில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கடையில் கல்லாவில் உட்கார்ந்து கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி கல்லா மேஜையை தட்டி புகையிலை கேட்டார். அதற்கு அவர் இங்கு புகையிலை விற்பனை செய்வதில்லை என்று கூறினார் .இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசாமி அங்கிருந்த சோடா பாட்டில்களை உடைத்தும், மேஜை நாற்காலிகளையும், கேஷியர் பிரபாகரனின் இருசக்கர வாகனத்தையும் உடைத்துசேதப்படுத்தினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது .இது குறித்து பிரபாகரன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்ட கவுண்டம்பாளையம் இந்திரா நகரை சேர்ந்த மதன்குமார் என்ற அட்டு மதன் ( வயது 27) என்பவரை நேற்று இரவு கைது செய்தார்.இவரை துரத்தி செல்லும் போது அங்குள்ள பாலத்தில் இருந்து மதன் குமார்கீழே விழுந்தார். இதில் அவரது காலில் முறிவு ஏற்பட்டது. இதற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கைது செய்யப்பட்ட கொள்ளையன் அட்டு மதன் மீது கோவைகாட்டூர், போத்தனூர், சாய்பாபா காலனி, ரத்தினபுரி, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி கொலை முயற்சிஉட்பட 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன…அவன் காவல் நிலைய ரவுடிகள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளான். அவனிடமிருந்து கத்தி அரிவாள்போன்ற ஆயுதங்கள் மீட்கப்பட்டது.மேலும் விசாரணை நடந்து வருகிறது.பிரபல வழிப்பறி கொள்ளையனை மடக்கிப்பிடித்த கவுண்டம்பாளையம் போலீசாரை அந்த பகுதி பொதுமக்களும் வியாபாரிகளும் பெரிது பாராட்டினார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0