கோவை ஆர் .எஸ் . புரம் .கிழக்கு சம்பந்தம் ரோட்டை சேர்ந்தவர் அல்மோஸ் சாஜித் ( வயது 45) இவர் ஆர். எஸ். புரம் கிழக்கு சம்பந்தம் ரோட்டில் நந்தி கிஷோர் என்பவரது கட்டிடத்தில் கடந்த 20 21 ஆண்டுமுதல் வாடகைக்கு உடற்பயிற்சி கூடம் ( ஜிம்) நடத்தி வந்தார். இதை காலி செய்வது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 3 தேதிஅந்த உடற்பயிற்சி கூடத்தின்பூட்டை உடைத்து அங்கிருந்த கருவிகள் ,லேப்டாப், உட்பட அனைத்து பொருட்களையும் எடுத்துச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ 17 லட்சம் இருக்கும். இது குறித்து அல்மோஸ் சாஜித் ஆர்.எஸ். புரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார்கட்டிட உரிமையாளர்நந்தி கி ஷோர் மீது வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0