பிரபல வழிப்பறிகொள்ளையன் கபாலிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை.

கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையப் பகுதியில் ஆவின் கடையில் ஊழியராக வேலை பார்த்தவர் சத்யராஜ். இவரை 4 – 8 – 20 21 அன்று கபாலி என்ற இளமுருகன் மிரட்டி ரூ. 1500 கொள்ளையடித்தார். இதேபோல் மற்றொரு பேக்கரி கடை ஊழியர் சுரேஷ் என்பவரை மிரட்டி ரூ 1000 பறித்தார். அப்போது அவரை பிடிக்க முயன்ற போது கத்தியால் குத்தி கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி விட்டு தப்பி ஓடினார். இது குறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கபாலியை கைது செய்தனர். இதுகுறித்து கோவை 2-வது சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது .வழக்கை விசாரித்த நீதிபதி கவுதம் குற்றம் சாட்டப்பட்ட கபாலிக்கு 7 ஆண்டு சிறைத் தண்டரையும் ,ரூ 1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில்வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி வாதாடினார்.