திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் கொசுவை அடியோடு ஒழித்து விட கொசு மருந்து இல்லை

திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி பள்ளிப்பட்டு ஆர் கே பேட்டை ஈக்காடு பூந்தமல்லி வில்லிவாக்கம் சோழவரம் கும்மிடிப்பூண்டி மீஞ்சூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது இந்த ஒன்றியத்தில் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் அடங்கியுள்ளது மாவட்டம் முழுவதிலும் கொசுக்கள் டன் கணக்கில் உற்பத்தியாகின்றன கொசுக்களை முற்றிலும் அடியோடு ஒழித்திட பல்வேறு ஊராட்சிகளில் கொசு மருந்துகளே இல்லை என பதில் தான் வருகிறது இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும் எந்தவித அக்கறையும் கொள்ளவில்லை உதாரணமாக சொல்லப்போனால் ஈக்காடு ஊராட்சி ஒன்றியம் காக்களூர் பஞ்சாயத்தில் கொசு தொல்லை அதிகமாகி விட்டது இது குறித்து கேட்டால் கொசு மருந்து ஸ்டாக் இல்லை இந்த நிலை எல்லா ஊராட்சிகளிலும் தான் நாங்கள் என்ன செய்யட்டும் என்ற பதில் தான் தருகின்றனர் இப்போது டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கிவிட்டது மாவட்ட கலெக்டர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் பார்க்கலாம்