சூலூரில் கல்லூரியில் பயிலும் முதல் வாக்காளர்கள் ஓவிய போட்டி

நடைபெறும் மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்கினை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலரின் அறிவுறுத்தலின்படி சூலூர் பேரூராட்சியும் சூலூர் ஆர் வி எஸ் கலை அறிவியல் கல்லூரி BBA (ca) பிரிவு மாணவ மாணவிகள் மத்தியில் ஓவிய போட்டி நடைபெற்றது இதில் ஆர்வமாக கலந்து கொண்ட மாணவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களை வரைந்தும், சாதி, ம,த இன, மொழி அனைத்தும் கடந்து இந்தியர் என்ற உணர்வோடு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதையும் ஓவியங்களாக வரைந்து ஜனநாயக கடமையை ஆற்றும் போது நாட்டின் வளர்ச்சி குறித்தும் ஓவியங்கள் வரைந்து முதல் முறை வாக்களிக்கும் மாணவ மாணவியர்கள் 100% வாக்கினை உறுதி செய்தனர் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழும் சிறந்த முறையில் ஓவியம் வரைந்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.