மருதமலை கோவிலில் இன்று திருக்கல்யாண நிகழ்ச்சி. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கோவை அருகில் உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திர திருவிழா கடந்த 21-ந் தேதி கணபதி பூஜையுடன தொடங்கியது. தினமும் காலையிலும், மாலையிலும் சிறப்பு பூஜைகளும், வேள்விகளும், நடந்தது .இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7:30 மணி முதல் 12 மணி வரை 4ஆம் கால வேள்வி, மூல மந்திரம் அர்ச்சனை நடந்தது. காலை 9 – 30மணி முதல் 10:30 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் திரு கல்யாண மண்டபத்தில் நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை 4:30 மணி முதல் இரவு 8 மணிக்குள் 5-ம் கால வேள்வி, சண்முக அர்ச்சனை மற்றும் வேள்வி பூஜை நடக்கிறது. தொடர்ந்து வள்ளி தெய்வானை முருகப்பெருமான் தங்க ரதத்தில் திருவீதி உலா வருகிறார் .நாளை ( திங்கட்கிழமை) 25ஆம் தேதி ஆறாம் கால பூஜை நடக்கிறது. பின்னர் காலை 9 மணிக்கு மகா கணபதி பூஜை தீபாரதனை நடக்கிறது. காலை 10:15 மணி அளவில் மூலவருக்கு கலசங்களால் அபிஷேகமும், சிறப்புஅலங்காரமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.