குழந்தை இல்லாத ஏக்கத்தால்சுடுகாட்டில் விஷம் குடித்துதொழிலாளி தற்கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள காளிபாளையம், எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ரத்தினசாமி .இவரது மகன் ரமேஷ் (வயது 29 )கூலி தொழிலாளி. இவரது மனைவி நாகராணி (வயது 25)இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரமேஷ் நேற்று முன்தினம் மதுவில் விஷம் கலந்து குடித்து .பொள்ளாச்சி குஞ்சு பாளையத்தில் உள்ள சுடுகாட்டில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது மனைவ நாகராணி பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.