கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரி மாநில அளவிலான ஒரு நாள் தொழில் நுட்பக் கருத்தரங்கம் ‘டெக் நுவான்சா – 2024’ நிகழ்ச்சி 22.03.2024 (வெள்ளிக்கிழமை) அன்று கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் இணை செயலாளர் திரு. ஜி. பி. கெட்டிமுத்து, அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை, எம்பஸிஸ், இந்தியன் கேம்பஸ் லீட் திரு. எம். டி. ஜோஷுவா டேவிட் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவரது உரையில் நாம் இந்த பிரபஞ்சத்தில் தனித்துவம் மிக்க மனிதர்கள், எப்போதும் பிறருடன் ஒப்பிடக்கூடாது. நமக்கென்று இருக்கும் திறமையை தொடர் கற்றல் மற்றும் பயிற்சி மூலமாக மேம்படுத்தி கொண்டே இருக்க வேண்டும். இதற்கான பலன் உடனடியாகவும் கிடைக்கலாம் சிறிது காலம் தாமதமும் ஆகலாம், இறுதியில் அதற்கான பலன் நம்மை அடைந்தே தீரும். எனவே மாணாக்கர்கள் சோர்ந்து விடாமல் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் 15 கல்லூரிகளைச் சேர்ந்த 215 மாணவ/மாணவியர் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
மேலும் கோட் டீபக்கிங், சர்கியூட் டீபக்கிங், கணினி வழி வடிவமைப்பு போட்டி, தொழில்நுட்ப வினாடி-வினா போட்டி, வணிக வினாடி- வினா போட்டி, ஆங்கிலத்தில் கதை சொல்லுதல், ஆங்கில கவிதை எழுதுதல், ஜாம் மற்றும் ஸ்பெல் பீ போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டன. முன்னதாக நான்காம் ஆண்டு மின்னணுவியல் மற்றும் தொடர்பு துறை மாணவி செல்வி. வி. பூவிகா வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் நிர்வாகக்குழு உறுப்பினர் திரு. கே. ஆர். கவியரசு, தலைமை நிர்வாக அதிகாரி திரு. க. கெளதம் கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. தங்கவேல், துணை முதல்வர் முனைவர் சு.பிரகாசம் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் வெங்கடேஸ்வரா நர்சிங் கல்லூரியின் முதல்வர் முனைவர். முத்துக்கண்ணு மற்றும் பிஸியோதெரபி கல்லூரியின் முதல்வர் திரு. நந்தகுமார் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியின் இறுதியில் நான்காம் ஆண்டு மின்னணுவியல் மற்றும் தொடர்பு துறை மாணவி செல்வி. ஆர். தீபிகா நன்றியுரை வழங்கினார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0