ரூஃப் காலம் ஃபவுண்டேஷன் (RCF) நிபுணர் என்னும் தனது தைரியமான புதிய பிராண்ட் முன்முயற்சியின் மூலம் டால்மியா சிமென்ட், வீடு கட்டுபவர்களுக்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் மேம்படுத்தியுள்ளது, சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங்கை பிராண்ட் தூதராக நியமித்துள்ளது! தனது பாரம்பரிய தொழில்நுட்பத் திறமையை வீடு கட்டுவோருக்கு தனது தொழில்நுட்ப ஆதரவுக் குழுவின் மூலம் வழங்கவுள்ளது
திருச்சிராப்பள்ளி, மார்ச் 23, 2024: வீட்டின் மிக முக்கியமான பகுதியில் அதாவது கூரை தூண் அடித்தளம் ஆகியவற்றில் சிமெண்டை சரியான முறையில் பயன்படுத்த வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டவும் உதவவும், டால்மியா சிமென்ட் தனது புதிய பிரச்சாரமான “RCF ஸ்ட்ராங் டோ கர் ஸ்ட்ராங்” மூலம் தனது பிராண்ட்டின் கூர்நோக்கத்தில் ஒரு பெரும் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட இந்தப் புதிய செய்தியிடல், வீடு கட்டுபவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடையே சரியான சிமெண்டைத் தேர்ந்தெடுப்பது, அதை சரியான முறையில் பயன்படுத்துவது மற்றும் அவர்களின் கனவு இல்லங்களை உருவாக்க சிறந்த கட்டுமான நடைமுறைகளைப் பின்பற்றுவது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டால்மியா சிமெண்ட் நிறுவனத்தை ஒருங்கிணைக்கும் விளம்பரப் பிரச்சாரம் RCF நிபுணர்’ இல் சூப்பர்ஸ்டார் ரன்வீர் சிங் இடம்பெற்றுள்ளார். இது ஒரு விரிவான மல்டிமீடியா அணுகுமுறையின் மூலம் தொடங்கப்படும், சூப்பர்ஸ்டார் ரன்வீர் சிங் பிராண்டின் முக்கிய தொழில்நுட்ப அறிவு மற்றும் இணையற்ற சேவையின் RCF ஸ்ட்ராங் தோ கர் ஸ்ட்ராங் ” செய்திக்கு அதிக செயல்திறனைச் சேர்ப்பதன் மூலம், இதன் வீச்சைப் பெருக்குவார் இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும் தலைமைச் செயல் அலுவலருமான திரு.புனித் டால்மியா அவர்கள், “கடந்த எட்டு தசாப்தங்களாக எங்களின் புகழ்பெற்ற இந்தப் பயணத்தில், டால்மியா சிமென்ட், நமது தேசத்தை அதன் வேர்களில் இருந்து கட்டியெழுப்ப தோளோடு தோள் நின்று, பிரபலமான தேசிய அடையாளங்களை உருவாக்குவதற்கும், மில்லியன் கணக்கானவர்களுக்கு மகிழ்ச்சியான இல்லங்களை உருவாக்குவதற்கும் பங்களித்துள்ளது. தனிநபர்களாக, நம் வாழ்வில் ஆழமான மதிப்பையும் இடத்தையும் வைத்திருக்கும் நமது வீடுகளை நாங்கள் மதிக்கிறோம். எனவே, சிமெண்ட் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தின் முறையான பயன்பாட்டுடன் அத்தகைய தலைமுறைகள் நீடிக்கும் சொத்தை உருவாக்குவது கட்டமைப்பு ஒருமைப்பாட்டை உறுதி செய்வது மட்டுமல்லாமல், வாழ்க்கைக்கான முதலீட்டையும் பிரதிபலிக்கிறது
எங்கள் புதிய பிராண்ட் விளம்பரப் பிரச்சாரம் ஒரு சிறந்த பாரம்பரியத்தை மட்டுமின்றி நுகர்வோரை மையமாகக் கொண்ட அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது – சரியான கவனிப்புடன் ஒரு வீட்டைக் கட்டுவது என்பது தலைமுறைகளுக்கு அதைக் கட்டியெழுப்புவதாகும் என்று அவர் கூறினார்.
தனது கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நட்சத்திரம் திரு. ரன்வீர் சிங் அவர்கள், “80 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமானத் துறையில் பங்களிப்பதற்காக டால்மியா சிமென்ட் நிறுவனத்தை நான் எப்போதும் போற்றுகிறேன். வீட்டுக் கட்டுமானத்தில் கூரை, தூண் மற்றும் அடித்தளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக நிறுவனத்துடன் கூட்டாண்மை மேற்கொண்டுள்ளதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் ஒருங்கிணைந்து, ஒவ்வொரு கட்டமைப்பும் காலத்தைக் கடந்து நிற்பதை உறுதிசெய்து, தகவலறிந்த தேர்வுகளைச் செய்ய தனிநபர்களுக்குக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். டால்மியா சிமெண்ட் (பாரத்) லிமிடெட்டின், தலைமை செயலபாட்டு அலுவலர், திரு. சமீர் நாக்பால் அவர்கள், ” நுகர்வோரின் வாழ்க்கையில் பிராண்ட் ஒரு முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம், இதனால் அவர்கள் தகவலறிந்த தேர்வுகளை செய்ய முடியும். டால்மியா சிமென்ட் பல ஆண்டுகளாக சிமென்ட் செய்முறையை மேம்படுத்துவதற்கான தனியுரிம அறிவை உருவாக்கியுள்ளது, இது கூரை தூண் மற்றும் அடித்தளத்திற்கு மிகவும் பொருத்தமானது. டால்மியா சிமென்ட் பல ஆண்டுகளாக சிமென்ட் செய்முறையை மேம்படுத்துவதற்கான தனியுரிம அறிவை உருவாக்கியுள்ளது , இது கூரைத் தூண் மற்றும் அடித்தளத்திற்கு மிகவும் பொருத்தமானது. இவை வீட்டின் கட்டமைப்பில் மிகவும் முக்கியமான கூறுகள் மற்றும் அதன் வலிமை மற்றும் நீண்ட ஆயுளுக்கு பொறுப்பாகும். RCF க்கு சரியான சிமெண்டை வழங்குவதோடு, வீடு கட்டுபவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சிமெண்டை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு உதவும் வலுவான தொழில்நுட்ப பணியாளர்களும் எங்களிடம் உள்ளனர். RCF பிரச்சாரம் இந்த மதிப்பு முன்மொழிவை முன்னுக்குக் கொண்டுவருகிறது என்று கூறினார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0