நீலகிரி மாவட்ட உதகையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் குடிநீர் தட்டுப்பாடடு

நீலகிரி மாவட்டம் முழுவதும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் உதகையில் உள்ள அனைத்து ஏரிகளிலும் குடிநீர் குறைந்து வருகின்றன இதனால் உதகை 18வது வார்டு பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன, மக்களும் பெரும் இன்னலுக்கு உள்ளானார்கள் குழாயின் தண்ணீர் வந்து 8 நாட்களுக்கும் மேலானதாக மக்கள் தெரிவித்ததற்கு இணங்க 18 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கே முஸ்தபா அவர்கள் உடனடி நடவடிக்கையாக நகராட்சி பொறியாளர் சேகரன் அவர்களிடம் நிலைமையை எடுத்துசொன்னதால் அவரின் ஆணைக்கேற்று ஓவர்சியர் சகோதரியார் சண்முகவள்ளி அவர்களின் ஏற்பாட்டில் Tap Inspecter சங்கர் அவர்களின் முயற்சியில் பிளம்பர் சுரேஷ் மற்றும் பகுதி நகர மன்ற உறுப்பினர் கே எ முஸ்தபா அவர்கள் உடனிருந்து பகுதி மக்களுக்கு உதகை நகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் அப்பகுதி மகளிர் மக்களுக்கு வழங்கப்பட்டது, உதகை நகராட்சிக்கு நகர மன்ற உறுப்பினர் முஸ்தபா அவர்களுக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்