நீலகிரி மாவட்டம் உதகை மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் ஏற்பாட்டில்
தவக்கால பரிகார பவனி உதகை காந்தல் குருசடி இயேசுவின் திருத்தலம் தென்னகத்தின் கல்வாரி மாநில திருத்தலம் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ கத்தோலிக்க ஆலயங்களில் துவங்கிய சாம்பல் புதன் அன்றிலிருந்து புனித வெள்ளி, இயேசு உயிர்த்தெழும் ஞாயிறு வரையில் கிறிஸ்தவர்கள் புனித தவக்கால நோன்பு அணிசரித்து வருகின்றனர்,
தவக்காலத்தின் ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமை ஆண்டுதோறும் தவக்கால பரிகார பவனி நடைபெற்று வருகின்றன, இந்த ஆண்டும் தவக்காலத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அனைத்து கத்தோலிக்க திருச்சபையின் ஆலயங்களில் இருந்து பங்கு மக்கள் உதகை தூய இருதி ஆண்டவர் பேராலயத்தில் ஒன்று கூடினர், தவக்கால பரிகார பவனியை தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் பங்குத்தந்தை ரவி லாரன்ஸ் துவங்கி வைத்தார், முன்னிலை குருசடி திருத்தளத்தின் பங்குத்தந்தை அதிபர் ஜெயக்குமார,உதவி பங்குத்தந்தை ஜூடு மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர், உலக சமாதானத்திற்காகவும், நீலகிரி மாவட்ட மக்கள் மற்றும் இயற்கை வளம் பாதுகாக்கப்படவும் மழை வர வேண்டும், இந்தியாவிற்கு நல்ல ஆட்சி தலைவர்கள் வரவேண்டும் முதன்மை நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு இந்த தவக்கால பரிகார பவனி தூய இறுதி ஆண்டவர் பேராலயத்தில் இருந்து துவங்கி சேரிங் கிராஸ், கார்னேசன் சாலை, உதகை அரசு மருத்துவமனை சாலை, குழந்தை இயேசு ஆலயம் சாலை, மேரிஸ் ஹில், ரோகினி, காந்தல் என சாலைகளை கடந்து சென்றனர், இந்த தவக்கால பரிகார பவணியில் தூய இருதி ஆண்டவர் ஆலயம், நொண்டி மேடு தோமையார் ஆலயம், எலிக்கள் யூதாதையு ஆலயம், மரியன்னை ஆலயம், ரோஸ் மவுண்ட் ஜெபமாலை அன்னை ஆலயம், புனித அந்தோனியார் ஆலயம், பிங்கர் போஸ்ட் திரேச அன்னை ஆலயம், காந்தல் செபஸ்தியார் ஆலயம், எச்பி எப் மரியன்னை ஆலயம், மற்றும் குரு செடி திருத்தலம் ஆகிய ஆலயங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேலான பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டு தவக்கால பரிகாரி பவணியில் பிரார்த்தனைகளும் பாடல்களும் பாடி நடந்து வந்தனர், காந்தல் முக்கோணத்தில் இருந்து சிலுவைப் பாதை உதகை மறை மாவட்ட ஆயர் அமுல்ராஜ் அவர்கள் தலைமையில் துவங்கப்பட்டது, உடன் மறை மாவட்ட முதன்மை குருவி V கிறிஸ்டோபர் லாரன்ஸ், பொருளாளர் லாசரஸ் ஸ்டீபன், பங்குத்தந்தை பிராங்க், பிங்கர் போஸ்ட் திரிஷா ஆலயம் பங்குத்தந்தை லியோன் பிரபாகரன், குழந்தை திரேசா பள்ளியின் கிங்ஸ்டன், சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பெரியநாயகம், பெனெடிக்ட், மைக்கேல் வின்சென்ட் பால், மற்றும் அனைத்து பங்கு குருக்கள் கலந்து கொண்டு உதகை காந்தல் குருசடி திருத்தலத்தின் நுழைவிலிருந்து இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் சிலுவைப் பாதை ஒவ்வொரு ஸ்தலமாக தியானிக்கப்பட்டு மக்கள் சிலுவையை சுமந்து சென்றனர், இதில் அனைத்து பங்கு மக்களும் திரளாக கலந்து கொண்டனர், இதனைத் தொடர்ந்து உதகை காந்தல் குரு செடி திருத்தத்தில் உதகை மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் அவர்களின் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பதி நிறைவேற்றப்பட்டது, உடன், உதகை மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ், குருசடி திருத்தல அதிபர்
ஜெயக்குமார், பங்கு குருக்கள் ரவி லாரன்ஸ், லியோன்ஸ், பெரியநாயகம், கிங்ஸ்டன், கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது,
இதில் திரளான மக்கள் வருகை தந்தனர் திருப்பலி நிறைவாக சிறப்பு ஆசிர்வதித்துடன் திருப்பலி நிறைவு பெற்றது, இதனைத் தொடர்ந்து வந்திருந்த அனைத்து மக்களுக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது நிகழ்ச்சியின் நிறைவாக குருசடி திருத்தளத்தின் அதிபரும் பங்குத்தந்தை ஜெயக்குமார் அவர்கள் நன்றி உரையில் இந்த தவக்கால பரிகார பவனி மற்றும் சிலுவைப் பாதைகள் திருப்பலி அன்பின் விருந்து இவைகளை சிறப்பாக செய்து தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் ,
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0