மீண்டும் பாஜக உறுப்பினராகிறார் டாக்டர் தமிழிசை

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வியுற்றதை அடுத்து அவர் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் ஆளுநருக்கு முதலமைச்சருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 2021 ஆம் ஆண்டு புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தனது இரு மாநில ஆளுநர் பதவியையும் ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கடிதம் எழுதிய நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில பொறுப்பு ஆளுநராக சி.பி ராதாகிருஷ்ணனின் நியமித்து உத்தரவிட்டார். இதனை அடுத்து நேற்று புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இருந்து விடைபெற்ற தமிழிசை சௌந்தரராஜன் இன்று பாஜகவில் மீண்டும் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவின் அடிப்படை உறுப்பினராக இன்று இணைய உள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில் தமிழிசை சௌந்தர்ராஜன் மீண்டும் பாஜகவில் இணைவது கட்சிக்கு மேலும் பலம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வியுற்றதை அடுத்து அவர் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் ஆளுநருக்கு முதலமைச்சருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 2021 ஆம் ஆண்டு புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தனது இரு மாநில ஆளுநர் பதவியையும் ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கடிதம் எழுதிய நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில பொறுப்பு ஆளுநராக சி.பி ராதாகிருஷ்ணனின் நியமித்து உத்தரவிட்டார். இதனை அடுத்து நேற்று புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இருந்து விடைபெற்ற தமிழிசை சௌந்தரராஜன் இன்று பாஜகவில் மீண்டும் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவின் அடிப்படை உறுப்பினராக இன்று இணைய உள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில் தமிழிசை சௌந்தர்ராஜன் மீண்டும் பாஜகவில் இணைவது கட்சிக்கு மேலும் பலம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.