வால்பாறையில் தவறான தகவல்களை ஆடியோ முலம் வாட்சப் குழுக்களுக்கு அனுப்பினால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும்

வால்பாறையில் தவறான தகவல்களை ஆடியோ முலம் வாட்சப் குழுக்களுக்கு அனுப்பி பொதுமக்களை அச்சுறுத்தும் நபர்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் அறிவித்துள்ளார் கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களுக்கு முன் வாட்சப் குழுக்களில் பெண் குரலில் பதிவு செய்த ஒரு ஆடியோ வைரலாகப்பரவியது அதில் வால்பாறை பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே இரண்டு நபர்கள் ஒரு மாணவியை கடந்த முயன்றதாகவும் அப்போது அந்தப்பெண் சத்தம் போட்டதால் அங்கிருந்த இரண்டு நபர்களும் பிடித்து வால்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் வால்பாறை பகுதியில் இன்னும் 40 பேர்கள் வந்திருப்பதாகவும் எனவே தனியாக யாரும் நடமாட வேண்டாம் என்றும் பதிவு செய்யப்பட்ட அந்த ஆடியோ தற்போது அனைத்து வாட்சப் குழுக்களிலும் வைரலாகி பரவி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது இந்நிலையில் இத்தகவல் குறித்து சம்பந்தப்பட்ட வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமாரிடம் கேட்டபோது இதுபோன்ற தவறான தகவலை பரப்புவது பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒரு பதிவு வெளியிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் அதே போல அவரின் உத்தரவிற்கிணங்க வால்பாறை பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காவல் துறையினரின் பாதுகாப்பு பணி முழுவீச்சில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதுபோன்ற எந்த தகவலும் இல்லை எனவும் தவறான தகவல்களை சமுக வலைதளங்களில் பதிவிட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் யாராவது நடந்து கொள்வது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதுபோன்ற தவறான பதிவுகளை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்