கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை வணிகவியல் மற்றும் ஆராய்ச்சி துறையின் சார்பாக ஒரு பொறுப்புள்ள இந்திய குடிமகனின் தரம் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் சி. நஞ்சப்பா அவர்கள் தலைமை உரையாற்றினார். அவரது உரையில் பழம்பெரும் சுதந்திரப் போராட்ட தியாகி திரு மார்க்கண்டன் அவர்களையும் அவர்களது போராட்ட நினைவுகளையும் எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினர் முனைவர் .ந. மார்க்கண்டன், முன்னாள் துணைவேந்தர், காந்தி கிராம பல்கலைக்கழகம். அவர்களுடைய உரையில் ஒரு பொறுப்புள்ள இந்திய குடிமகனின் தரம் என்ற தலைப்பில் பத்து மாறுபட்ட கருத்துக்களை மிகத் தெளிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். அவருக்கு ஆசிரியராக இருந்த போராட்டத் தியாகிகளை இந்த நேரத்தில் மாணவர்கள் இடையே பகிர்ந்து கொண்டார். ஜாதிகள் இல்லை, மதம் இல்லை என்றும் அம்பேத்கரின் அரசியல் சாசனம் பற்றியும், தமிழ் மொழியை விட சிறந்த மொழி எதுவும் இல்லை என்றும், ஹிந்தி மொழியினை அனைவரும் தெரிந்து கொள்ளலாம் என்றும் அதனை திணிக்க கூடாது என்றும், பிறர் கருத்துக்களுக்கு பொறுமையாக இருந்து கேட்க வேண்டும் என்றும், இந்திய குடிமகனாக மட்டுமில்லாமல் உலக குடிமகனாகவும் இருக்க வேண்டும். உலகில் உள்ள பின்தங்கியவர்களை உயர்த்த வேண்டும் என்றும் கூறினார். வன்முறை மற்றும் வசை சொல் பயன்படுத்துதல் கூடாது என்றும் தெரிவித்தார். உலக கூட்டாட்சி பற்றி சிந்திக்க வேண்டும் என்றார். ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு சிலருக்கு மட்டும் சிறப்பு அதிகாரம் என்பதை தவிர்க்க வேண்டும் என்றார். மாணவ மாணவிகள் தன்முனைப்பு இல்லாதவராகவும் தன்னைத்தான் சுயமதிப்பீடு செய்து கொள்பவராகவும் இருக்க வேண்டும் என்றார். இறுதியாக காந்தியின் வைஷ்ணவ ஜனதோ என்ற தமிழ் பாடலை பாடி மாணவர்களிடையே சமூக சமத்துவம் மற்றும் அமைதி வழியில் விடுதலை காணும் முறையும், நல்லது செய்பவர்கள் உயர்ந்த ஜாதியைச் சார்ந்தவர்கள் என்றும் தீமை செய்பவர்கள் தாழ்ந்த ஜாதியைச் சார்ந்தவர்கள் என்றும் எடுத்துரைத்தார். இதில் வணிகவியல் துறை சார்ந்த முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக வணிகவியல் துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் சவிதா சிறப்பு விருந்தினரின் அறிமுக உரையினை வழங்கினார். இறுதியாக திரு.S. சதீஷ் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0