கோடை காலம் தொடங்குவதையொட்டி பக்தர்களின் தாகத்தை போக்க அனைத்து கோவில்களிலும் நீர்மோர் வழங்க முதலமைச்சர்மு.க. ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர். இதை யடுத்து அனைத்து கோவில்களிலும் கோவில்நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது. கோவை காந்தி பார்க்கில் உள்ள அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் பரமசிவம், அறங்காவலர் மகேஸ்வரன் ஆகியோர் இன்று நீர்மோர் வழங்கினார்கள்.மே மாதம் 30 -ம்தேதி வரை இது வழங்கப்படுகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry1
Dead0
Wink1